கோவை: கோவையில் கடிதம் எழுதிவிட்டு மாயமான கல்லூரி பேராசிரியரை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் ராஜதுரைராஜ் (44). இவர் கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவரது செல்போனுக்கு, அவரது மனைவி ஜெயஸ்ரீ (30), கடந்த 13ம் தேதி பேச முயற்சி செய்தார். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.
இந்த நிலையில், 17ம் தேதி ராஜ துரைராஜ் ஜெயஸ்ரீக்கு கூரியரில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் எனது குறிக்கோளை நோக்கிச் செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜெயஸ்ரீ சேலத்தில் இருந்து கணவரைத் தேடி கோவை வந்தார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. ராஜதுரை ராஜ் வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். பின்னர், இது தொடர்பாக ஜெயஸ்ரீ பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.