கோவையில் ஓடும் ரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் கைது!

கோவை: ஓடும் ரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: ஓடும் ரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த 39 வயது, பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் கோவையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அவரது இருக்கைக்கு அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்தப் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கூச்சலிட்டார்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...