கோவையில் மாட்டுவண்டியில் பயணித்து பாரம்பரியத்தை பறைசாற்றிய புதுமண தம்பதியர்!

கோவை: கோவையில் புதுமண தம்பதியர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை: கோவையில் புதுமண தம்பதியர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்-சுமித்ரா ஆகியோருக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இன்று மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள் என்பதால் தங்களது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மறுவீட்டிற்கு மாட்டுவண்டியில் செல்ல முடிவு செய்தனர்.

இதனையடுத்து, புதுமணத் தம்பதியினர் அரசிப்பாளையம் கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு திருமண மண்டபத்தில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்றனர்.

இது குறித்து புதுமண தம்பதிகள் கூறுகையில், விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், காங்கேயம் காளைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோக்கில் மாட்டுவண்டியில் மறுவீடு சென்றதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...