பொள்ளாச்சி: நாளை தமிழகத்தில் கொண்டாடபடவிருக்கும் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, பொதுமக்கள் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

இதனை முன்னிட்டு வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்காக, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில், ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, அகல் விளக்குகள் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது. விதவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.

அகல் விளக்கு ஒன்று ஒரு ரூபாய் வீதம் விற்பனை செய்வதால், டஜன் கணக்கில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால் விற்பனை சூடுபிடித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.