கோவை: கோவையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கேரள மாநிலம் மலப்புரம் அருகே அங்காடி புரத்தைச் சேர்ந்தவர் அணில் என்கிற அணில் குமார் (43). இவர் கோவை சாய்பாபா காலனியில் தங்கி பிரேம், செல்வராஜ், சுரேஷ், ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகியோருடன் சேர்ந்து வி.வி டிரேடர்ஸ் என்ற பெயரில் ஆன்லைனில் நிதி தொடர்பான தொழில் செய்து வந்தார்.
மேலும், அதில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு தினமும் ஒரு தொகை மற்றும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் செலுத்திய பணத்தை இரட்டிப்பாக்க திரும்பத் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். அதை நம்பி கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். அவ்வாறு பணம் செலுத்தியவர்களுக்கு சில தினங்கள் மட்டுமே தொகையை திருப்பிக் கொடுத்து வந்தனர்.
அதன்பிறகு, முதலீட்டாளர்களுக்கு கூறியபடி பணத்தை இரட்டிப்பாக கொடுக்கவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால், அவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் கடந்து 2019-ம் ஆண்டு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம், செல்வராஜ், சுரேஷ் ஆகிய 3 பேரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும், தலைமறைவான அணில் குமார், ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அணில் குமாரை போலீசார் நேற்று கேரள மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது:- முதலீட்டாளர்கள் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 2 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு கொடுப்பதாகவும் இரட்டிப்பாக பணம் தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவித்து உள்ளனர். அந்த வகையில் முதலீட்டாளர்களிடம் ரூ 3 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.