திருப்பூர்: திருப்பூரில் கார் மற்றும் சரக்கு ஆட்டோவில் எடுத்துவரப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் 700 கிலோ பறிமுதல் செய்த போலீஸார் இருவரை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் எம்ஜிஆர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோ மற்றும் காரை வழி மறித்த போலீசார், ஆட்டோ மற்றும் காரில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பாலாசிங் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும், பாலாசிங்கின் வீட்டில் வைத்து திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசார் குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் பாலாசிங் ஆகிய இருவரையும் கைது செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 700 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த சரக்கு ஆட்டோ மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில், தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ஸ்டாலின் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.