திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை; சராசரி அளவு 27.44 மி மீ மழை பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக, நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக, நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது.

இதற்கிடையே நிவர் புயல் தாக்கமாக, திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. 



இதற்கிடையே, நேற்று திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 5 மணியில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.இதன் பின்னர் மாலை 7 மணியில் இருந்து மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கன மழை கொட்டி தீர்க்க தொடங்கியது. 



இதன் பின்னர் சில மணி நேரம் தொடர்ந்து மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் மொத்த அளவு 429 மி மீ என்றும், குறிப்பாக அவிநாசியில் 80 மி மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை நேரம் என்பதால், அலுவலகங்களுக்கு சென்று வீடு திரும்பியவர்கள், மழையில் நனைந்தபடி சென்றனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பகுதி வாரியாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு: 

1) Tiruppur N - 60.00

2) Avinashi -  80.00

3) Palladam-  27.00

4) Uthukuli. -  27.00

5) Kangayam- 13.20

6) Dharapuram- 20.00

7) Mulanur_  9.00

8) Kundadam-  Nil

9) Thirumurthy Dam-Nil

10)Amaravathi Dam-5.00

11)Udumalai -  25.60

12)Madathukulam 29.00

13) Collectoraடீ - 44.00

14) Vellakovil RI  Office   -30.20

15) Thirumurthi Dam IB.  - 2.00

16) Tiruppur South -67.00

Total. -  439.00

Avg.  -  27.44

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...