திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக, நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது.

இதற்கிடையே நிவர் புயல் தாக்கமாக, திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.

இதற்கிடையே, நேற்று திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 5 மணியில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.இதன் பின்னர் மாலை 7 மணியில் இருந்து மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கன மழை கொட்டி தீர்க்க தொடங்கியது.

இதன் பின்னர் சில மணி நேரம் தொடர்ந்து மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் மொத்த அளவு 429 மி மீ என்றும், குறிப்பாக அவிநாசியில் 80 மி மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை நேரம் என்பதால், அலுவலகங்களுக்கு சென்று வீடு திரும்பியவர்கள், மழையில் நனைந்தபடி சென்றனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பகுதி வாரியாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு:
1) Tiruppur N - 60.00
2) Avinashi - 80.00
3) Palladam- 27.00
4) Uthukuli. - 27.00
5) Kangayam- 13.20
6) Dharapuram- 20.00
7) Mulanur_ 9.00
8) Kundadam- Nil
9) Thirumurthy Dam-Nil
10)Amaravathi Dam-5.00
11)Udumalai - 25.60
12)Madathukulam 29.00
13) Collectoraடீ - 44.00
14) Vellakovil RI Office -30.20
15) Thirumurthi Dam IB. - 2.00
16) Tiruppur South -67.00
Total. - 439.00
Avg. - 27.44