கோவை: கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்னை ஏமாற்றி குழந்தையை கொடுத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிருந்தா(21) என்ற பெண்மணி செல்வம் என்ற நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கர்ப்பமாகி குழந்தையை கொடுத்து விட்டு தற்போது தனது உறவு பெண்னை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தனக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், இது தொடர்பாக ஏற்கனவே பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு செல்வம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் டி.என்.ஏ சோதனையில் பிறந்த பெண் குழந்தை செல்வத்தின் குழந்தை தான் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது உறவு பெண்னை திருமணம் செய்து உள்ளதாகவும் பிருந்தா தெரிவித்தார்.
மேலும், தன்னை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் கடந்த 5 வருடங்களாக காத்து இருந்த நிலையில், தற்போது வேறு பெண்னை செல்வம் திருமணம் செய்து உள்ளதால் தன் மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனது குடும்பத்துடன் சென்று மனு அளித்தார்.