கோவை: கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முள்வேலி தடுப்பு வைக்க அனுமதி கொடுத்தது யார்..? என்று திமுக எம்எல்ஏ நா கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்காகத்தான் அரசே தவிர! மக்களை அச்சுறுத்துவதற்காக இல்லை!. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புறம் இரும்பு முள் கம்பிகள் பொருத்திய தடுப்பு வைக்கும் அடக்குமுறை முயற்சிக்கு அனுமதி கொடுத்தது யார்..?
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புறம் இரும்பு முள் கம்பிகள் பொருத்திய தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. தங்கள் உரிமைக்காகப் போராடும் மக்களை முள் கம்பிகள் கொண்டு தடுக்கும் மனிதநேயமற்ற செயலை கோவை மாவட்ட காவல் துறை செய்கிறது. ஆட்சியர் அலுவலகம் என்பது மக்கள் பணி செய்வதற்கா? அல்லது மக்களை அச்சுறுத்தவா?

இது முதலாளித்துவ, சர்வாதிகாரம் போன்ற ஒரு முயற்சியை நடைமுறைக்குக் கொண்டுவரும் ஆரம்பமாக தெரிகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாகம் முற்றிலும் முடங்கியிருப்பதை பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் பெருந்துயருடன் அனுபவிக்கிறார்கள். செயலற்றுக் கிடக்கும் அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் அல்லல்படும் மக்களின் நலன் காக்க, அவர்களின் குரல் அரசுக்கு கேட்பதை தடுக்க நினைக்கும் இது போன்ற சர்வாதிகார முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
‘குதிரை கீழே தள்ளியது மட்டுமில்லாமல், ஏறி மிதிப்பதைப் போல’, இது போன்ற புதுப்புது திட்டங்களை மக்களின் மீது அதிமுக அரசு ஏற்றி வருகிறது. மக்களை வஞ்சித்து, மத்திய அரசிடம் மண்டியிட்டு, சுயநலனைத் தவிர வேறெதற்கும் செயல்படாத, அரசு நிர்வாகத்தை மாற்றிடும் வரையில் மக்களின் போராட்டங்கள் தொடரும்.
அந்த போராட்டங்களை, இந்த முள் கம்பி பொருத்திய தடுப்புகள் போட்டு தடுக்க, ஒடுக்க நினைக்கும் இது போன்ற அடக்குமுறை முயற்சியை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களை அச்சுறுத்தும், இது போன்ற முயற்சிகளை உடனடியாக கை விட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.