திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக பட்டை நாமம் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது!

திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக பட்டை நாமம் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக பட்டை நாமம் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் மற்றும் விவசாய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகரில் 7 இடங்கள் உட்பட மாவட்டத்தின் 21 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் துவக்கி வைத்தார்.



மறியல் போராட்டத்தின் போது பேசிய அவர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு துணைபோகும் மாநில அரசுக்கு எதிராக முடிவில்லா போராட்டத்தின் தொடக்கமாக இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார்.

பின்னர், மத்திய தபால் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்தும், மண்சட்டியை தலையில் கவிழ்த்து வைத்தும் நூதன முறையில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...