கோவை: வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை, முகவரி கேட்பது போல் நடித்து பைக் ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை கணபதி வ.உ.சி வீதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பேச்சியம்மாள் (63). இவர் இன்று காலை தனது வீட்டின் முன்பு உறவினர் வருகைக்காக எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், ஒரு துண்டு பேப்பரை காட்டி இந்த முகவரி எங்கு உள்ளது என வினவி உள்ளனர்.
அப்போது, பேச்சியம்மாள் முகவரியை வாசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாய் மோட்டார் சைக்கிளில் விரைந்தனர். இதனால், அதிர்ச்சியான அவர் அலறி சத்தம் போட்டார். ஆனால், அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் 392, 397 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.