கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் வாட்ச்மேன் கைது

கோவை: கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.



கோவை: கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை, அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் 4 வயது சிறுமி கார் நிறுத்துமிடம் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, தனியாக நின்ற அந்த சிறுமிக்கு ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், அந்த குழந்தை சத்தம் போட்டு அழுததால், ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், வீட்டுக்கு அழுதபடி வந்த குழந்தையிடம் பெற்றோர்கள் விசாரித்த போது, காவலாளி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் தந்தை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து, ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...