கோவையில் வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை!

கோவை: கோவையில் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உருவாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உருவாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகர் பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சாக்கடைகள் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் உள்ளது. மேலும், வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், கொசுக்கள் உற்பத்தி ஆவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில்:-

டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றப்படுகிறது. டெங்கு கொசுக்களை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தண்ணீர் தொட்டிகளை நன்கு பராமரிக்க வேண்டும். சூரிய ஒளி படாதவாறு தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்க வேண்டும். ஆய்வுக்கு வரும் போது தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...