கோவையில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுப்பது போல் நடித்து திருடும் மர்ம பெண் கும்பல்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

கோவை: கோவையில் பிச்சை எடுப்பது போல் நடித்து கைக்குழந்தையுடன் ஒவ்வொரு தெருவாக நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடும் பெண் கும்பல் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை: கோவையில் பிச்சை எடுப்பது போல் நடித்து கைக்குழந்தையுடன் ஒவ்வொரு தெருவாக நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடும் பெண் கும்பல் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை சுந்தராபுரம், மதுக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரு பெண்கள் பிச்சை எடுப்பது போல் நடித்து குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு அங்குள்ள பொருட்களை திருடுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சி.சி.டி.வி கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மோகன் நகர், ஓம்சக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கைக்குழந்தையுடன் இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கிடமாக சென்றனர். இவர்களை யாராவது கவனித்தால் பிச்சை எடுப்பது போல் நடந்து கொண்டு மற்ற நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடியது தெரியவந்தது.

அதேபோல, மோகன் நகர் பகுதியில் ஒருவரது வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த இவ்விரண்டு பெண்களும் அங்கிருந்த பொருட்களை கவனிப்பது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. வீட்டு வாசல் அருகே இருந்த மூட்டைகளை ஒருவர் திறந்து பார்க்க மற்றொரு பெண் ஆள் நடமாட்டத்தை கண்காணித்து உள்ளார். இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், இப்படி சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் கும்பலை போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...