பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பு..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக, ஆழியார் அணை உள்ளது. ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதில், புதிய ஆயக்கட்டில் உள்ள வேட்டைகாரன்புதூர் கால்வாய்க்கு 18ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு சில மணி நேரத்தில் கால்வாய் துவங்கும் ஐந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில், உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வீணாகியது. 

இதையடுத்து, விவசாயிகள் பொதுப்பணிதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை நிறுத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மணல் மூட்டைகளை கொண்டு வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை தற்காலிகமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். வாய்க்கால் உடைப்பு சீரமைக்கப்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் வேட்டைகாரன்புதூர் கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டது. 

கடந்த சில நாட்களாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், மழை பெய்து வந்த நிலையில், மழை நீர் மற்றும் பாசன நீர் வாய்க்காலில் அதிகளவில் சென்றதால் உடைப்பு ஏற்பட்டது எனவும், இந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. விரைவில், அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு வாய்க்கால் முழுமையாக சீரமைக்கப்படும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...