கோவையில் பொது இடத்தில் குப்பைகளை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்!

கோவை: கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், எச்சில் துப்பினால் 200, பொது இடங்களில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் என அபராதம் நிர்ணயிக்கப்பட்டு கோவை மாநகராட்சி சார்பில் பொது மக்களுடைய கவனத்திற்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 51வது வார்டுகுட்பட்ட ராம் நகர் அருகே உள்ள கோகுலம் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைகளை கடைக்கு முன் உள்ள சாலையில் அதன் ஊழியர்கள் தடையை மீறி கொட்டினர்.

இந்த நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், சாலையில் குப்பையை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சாலையில் தடையை மீறி குப்பை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு நேற்று ரூபாய் 5 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.

மேலும், மீண்டும் தடையை மீறி சாலையில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...