நீலகிரியில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை..! குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு தொடங்கிய கனமழை, தொடர்ந்து காலை வரை நீடித்தது.

இந்நிலையில், உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் அதிகாலை ராட்சத கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் குளிர் காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...