கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் கிடைத்தது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் வசூலானது.
கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கு ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் வ.ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள் அருண் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிலையில், 9 தட்டு காணிக்கை உண்டியலில் காணிக்கையாக 11 லட்சத்து 61 ஆயிரத்து 750 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டதால் தட்டுக்காணிக்கை உண்டியல் மட்டும் எண்ணப்பட்டது. வேறொரு நாளில் நிரந்தர உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.