மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியல்..! 45-வது இடத்திற்கு தள்ளப்பட்ட கோவை மாநகராட்சி!

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ரேங்க் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சிக்கு 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ரேங்க் பட்டியலில் 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மத்திய அரசு நிதி உதவியுடன் கோவையில் இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் 23வது இடத்தில் கோவை மாநகராட்சி இருந்தது.

இந்த நிலையில், திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியது தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு ரேங்க் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில் சேலம் 8வது இடத்திலும் ஈரோடு 18வது ரேங்கிலும், திருப்பூர் 24வது ரேங்கிலும் உள்ளது. ஆனால், 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் கூறுகையில், கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பொழுது வெளியிட்டுள்ள இந்த பட்டியல் மாதம் ஒருமுறை வெளி வரக்கூடியது. இதனுடைய மொத்த வேலை கணக்கை கருத்தில் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் பட்டியல் தான் சரியானது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் சுமார் 1,570 கோடிக்கு பணிகள் வரையறுக்கப்பட்டன. தற்போது ரூபாய் 1,015 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை மறுசுழற்சி கழிவு, மறுசுழற்சி திட்டங்கள் போன்றவை முழுமையாக வராததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என லட்சுமணன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...