கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது, என கோவை வேளாண் பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:
கோவையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழையின்றி வெயில் மட்டும் காணப்பட்டது. நவம்பர் மாதம் தொடக்கம் முதல் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, தற்போது வரை கோவை மாவட்டத்தில் மொத்தம் 550 மி.மீ. அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, கோவையில் நேற்று 209.80 மிமீ மழை பெய்துள்ளது. இதில் அன்னூர்-12, விமானநிலையம்-34.2, மேட்டுப்பாளையம்-17, வால்பாறை பி.ஏ.பி.-3, வால்பாறை தாலுகா-2, சோலையாறு-15, ஆழியாறு-6.6, சூலூர்-38, கோவை தெற்கு-42, பெரியநாயக்கன்பாளையம்-17, தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகம்-20 மிமீ பதிவாகியுள்ளது. சராசரியாக 14.99 மிமீ மழை பதிவாகியுள்ளது.