கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாளாகும். இத்திருநாளில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறியும், பட்டாசுகள் வெடித்தும்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.
அவ்வாறு, பட்டாசுகள் வெடிக்கும்போது மாசுக்கட்டுப்பாட்டுத்துறை வழங்கியுள்ள அறிவுரைகளைப் பின்பற்றிட வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், சாலை பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தடுமாறும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல, பட்டாசு குப்பைகளை தெருவில் விட்டுவிடாமல், ஓரமாக ஒதுக்கி அவற்றை மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள பொதுமக்கள் உதவிட வேண்டும்.
மேலும், பட்டாசுகள் வெடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு அனைவரும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் உறுதிகொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.