கோவை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ அனைவரும்‌ மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

கோவை: கோவை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ அனைவரும்‌ மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ அனைவரும்‌ மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தீபாவளித்‌ திருநாள்‌ மக்களால்‌ மகிழ்ச்சியுடன்‌ கொண்டாடும்‌ திருநாளாகும். இத்திருநாளில்‌ ஒருவருக்கொருவர்‌ இனிப்புகளை பரிமாறியும்‌, பட்டாசுகள்‌ வெடித்தும்‌

மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்‌.

அவ்வாறு, பட்டாசுகள்‌ வெடிக்கும்போது மாசுக்கட்டுப்பாட்டுத்துறை வழங்கியுள்ள அறிவுரைகளைப் பின்பற்றிட வேண்டும்‌. குழந்தைகள்‌ பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள்‌ அருகில்‌ இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும்‌, சாலை பாதசாரிகள்‌ மற்றும்‌ வாகன ஓட்டிகள் தடுமாறும் வகையில்‌ பட்டாசுகள்‌ வெடிப்பதை தவிர்க்க வேண்டும்‌.

அதேபோல, பட்டாசு குப்பைகளை தெருவில்‌ விட்டுவிடாமல்‌, ஓரமாக ஒதுக்கி அவற்றை மாநகராட்சி பணியாளர்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளையும்‌ சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள பொதுமக்கள்‌ உதவிட வேண்டும்‌.

மேலும், பட்டாசுகள் வெடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட நேரமான காலை 6 மணி முதல்‌ காலை 7 மணி வரை மற்றும்‌ இரவு 7 மணி முதல்‌ இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில்‌ மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்‌. மேலும்‌, மருத்துவமனைகள்‌, வழிபாட்டுத்தலங்கள்‌ மற்றும்‌ அமைதிகாக்கப்படும்‌ இடங்களில்‌ பட்டாசுகள்‌ வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்‌.

சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பது நம்‌ ஒவ்வொருவரின்‌ கடமையும்‌, பொறுப்பும்‌ ஆகும்‌. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு அனைவரும்‌ மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாநகராட்சிப்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ உறுதிகொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...