பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (43), ஆனைமலை அமமுக கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், பெத்தநாயக்கனூரை சேர்ந்த அதிமுகவினர் சிலர் நேற்று முன்தினம் இரவு, வீரப்பன் வீட்டுக்கு சென்று வீரப்பனை தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரப்பனின் உறவினர்கள், நந்தகோபால் (32), ராமகிருஷ்ணன் (46) ஆகியோரை பீர்பாட்டிலில் தாக்கியுள்ளனர். இதில், நந்தகோபாலுக்கு மண்டை உடைந்துள்ளது. காயமடைந்த நந்தகோபால் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இது தொடர்பாக திமுகவில் இணைந்த வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை அதிமுக ஒன்றிய பொருளாளர் வரதராஜன் மற்றும் கோபால், சுரேஷ் ஆகியோர் மீது கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.