பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் அரிசியை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி - சோளபாளையம் கிராமம் வழியாக, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிறுத்தினர். ஆனால், காரை ஒட்டி வந்த மர்ம நபர்கள் பொது மக்களை கண்டதும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, தப்பிச் சென்றனர். 



காரில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த அதிகாரிகள், காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காரின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...