கோவை: கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையை அடுத்து பொள்ளாச்சி வேட்டைகாரன்புதூரில் இருந்து ஆனைமலை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் பறக்கும் படை தனிவட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆனைமலை வட்டம், வேட்டைகான்புதூரிலிருந்து ஆனைமலை நோக்கி வேகமாக வந்த நான்கு சக்கர வானத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் சுமார் 4000 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட அரிசி வாகனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பறக்கும் படையினரின் விசாரணையில் ரேசன் அரிசி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட நான்கு சக்கர வாகனம் மற்றும் அதனை ஓட்டி வந்த கருப்புசாமி என்பவரை பொள்ளாச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.