கோவையில் மோசடி வழக்கில் நிதி நிறுவன சொத்துக்கள் ஏலம்..! வரும் 19ம் தேதி மாவட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் பொது ஏலம்!

கோவை: கோவையில் மோசடி வழக்கில் பொதுமக்களிடம் இருந்து பணங்களை பெற்று ஏமாற்றிய மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பறிமுதல் செய்யப்பட உள்ளது.


கோவை: கோவையில் மோசடி வழக்கில் பொதுமக்களிடம் இருந்து பணங்களை பெற்று ஏமாற்றிய மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பறிமுதல் செய்யப்பட உள்ளது.

இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டத்தின்படி மோசடி வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சொந்தமான சுண்டக்காமுத்தூரில் உள்ள 1,950 சதுர அடி வீட்டு மனை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சொத்து வருகின்ற 19ம் தேதி பகல் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தகுதி பெற்ற அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...