கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 25,000 எக்டேர் பரப்பளவில் தேயிலைப் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உலா வருகின்றன.
இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வால்பாறை அடுத்த தாய் முடி தேயிலை தோட்டத்தில் 12ம் எண் காட்டில் தொடர்ந்து அங்கேயே நின்று முற்றுகையிட்டு உள்ளது.

இதனையடுத்து, வனத்துறையினர் தொடர்ந்து காட்டு யானைகளை விரட்டியும் அங்கிருந்து சென்றுவிட்டு மீண்டும் அங்கேயே வந்து நின்று கொண்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி தேயிலைத் தோட்டத்தில் உரமிடுதல், மருந்து அடித்தல், கொழுந்து பறித்தல் ஆகிய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது
இதனிடையே, தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், தேயிலைத் தோட்ட காவலர்கள், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.