கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்
கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த படகு இல்லம், தாவரவியல் பூங்கா போன்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்களின் முயற்சியால் வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், இன்று வால்பாறை வந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெறும் இடம் மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடம் ஆகி இடங்களை ஆய்வு செய்தார்.

மேலும், நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, வரும் ஆண்டு துவக்கத்திலேயே பணிகள் முடிவுற்று தாவரவியல் பூங்கா படகு இல்லம் செயலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், அதிமுக நகரச் செயலாளர் மயில் கணேசன், வாசு சண்முகம், ஜெபராஜ், பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.