கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. மேலும், மதியம் திடீரென கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, ஆர்.எஸ் புரம், கணபதி, விளாங்குறிச்சி, பீளமேடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மீண்டும் மாலை மழை பெய்ய துவங்கியது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்றும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம் அன்னூரில் 12 மில்லி மீட்டர், கோவை விமான நிலையம் பகுதியில் 9.6 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர், சின்கோனா 1 மில்லி மீட்டர், வால்பாறையில் 14 மில்லி மீட்டர், சோலையாறு 10 மில்லி மீட்டர், சூலூரில் 17 மில்லி மீட்டர், பெரியநாயக்கன் பாளையத்தில் 24.2 மில்லி மீட்டர், வேளாண் பல்கலைக்கழகத்தில் 2.4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 121.3 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...