திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம், பிகேஆர் லே அவுட், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வினோபா நகர் பகுதியிலுள்ள குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாட்டர் டேங்க்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் தடைபட்டதாகவும், மாலைக்குள் உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.