கோவை: கோவை பெரியகடை வீதியில் சர்ச்சுக்கு சொந்தமான கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்!
கோவை: கோவை பெரியகடை வீதியில் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான பழைய கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினர்.
கோவையில் உள்ள பழைய கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றில் பலவீனமாக உள்ளகட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பெரிய கடைவீதியில் உள்ள மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான வளாகத்தில், அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அந்த வளாகத்தில், உறுதித்தன்மை மிகவும் குறைந்து பாதுகாப்பில்லாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள்.

இந்த கட்டிடத்தை இனி பயன்படுத்த கூடாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 40 கடைகள் உள்ளன. இதில், சுமார் 10 கடைகள் செயல்படுகின்றன. மீதி கடைகள் மூடப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு இல்லாத கட்டிடம் என நிர்ணயதாதால், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.