கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.34 லட்சம் அபராதம் வசூல்

Coimbatore: கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.34 லட்சம் அபராதம் வசூல்



கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் இருந்து இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் என கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து மாநகராட்சி சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இதன்படி, முக கவசம் அணிய வில்லை என்றால் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 என அபராதம் விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 104 பொதுமக்களிடம் இருந்து 1 லட்சத்து 52 ஆயிரத்து 235 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல், வியாபாரிகளிடமிருந்து ரூ.32 லட்சத்து 57 ஆயிரத்து 17 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது."

மேலும், பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன் அரசு கூறியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...