வடகிழக்கு பருவமழை எதிரொலி: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்!

கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கோவை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கோவை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதிகள் சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. இதில் டெங்கு கொசுக்கள் உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டெங்கு தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவையில் டெங்கு நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து கொசுக்களை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, முக்கிய பகுதிகளில் காலை, மாலை என இரண்டு நேரங்களில் புகை அடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் மக்கள் அனுமதிக்க மறுப்பதால் வெளிப் பகுதிகளில் மட்டும் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டு அளிக்கப்படுகிறது.

மேலும், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...