கோவையில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் ஆய்வின் போது உத்தரவு..!

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு ஊழியர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மாநகராட்சி ஆணையர், குமரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு ஊழியர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மாநகராட்சி ஆணையர், குமரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



பின்னர், அப்பகுதியில் பழுதடைந்த தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணிகள் மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி, குடிநீர் பணிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் போன்றவை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, குடிநீர் சம்பந்தபட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 90-வது வார்டு கோவைப்புதூரில் நடந்து வரும், வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட, ஆணையர், அங்குள்ள பொது மக்களிடம் குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகிறதா? தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஆய்வின் போது, செயற் பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...