கோவை: கோவையில் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத விரக்தியில் ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவையை அடுத்த போத்தனூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48), ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி வசந்தி (45), இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிவகுமார் வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் புத்தாடை எடுத்துக் கொடுக்க பணமின்றி விரக்தியில் காணப்பட்டார்.
இந்த நிலையில், சுகுமார் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தீபாவளி செலவுக்கு கடன் கேட்டார். ஆனால் கடன் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
தொடர்ந்து வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி செலவுக்கு பணம் இல்லாத விரக்தியில் ஜோதிடர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.