கோவை: கோவையில் சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இடையர் வீதி சந்திப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர். மேலும், போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, உடனே அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும், ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது, அதில் சிறிய அளவிலான சிலை ஒன்று இருந்தது. சிலை குறித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சலிவன் வீதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் ஜெயச்சந்திரன் மோகன், பேரூர் அமுல் நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் வெங்கடேஷ் என்பதும், தப்பிச் சென்றது திருநாவுக்கரசு என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பித்துச் சென்ற திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.