கோவை: கோவையில் நவீன தொழில்நுட்ப கேமரா மூலமாக சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் மற்றும் சிக்னல்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தொடர்ந்து சாலை பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தி வருகின்றன. இந்த கேமராக்கள் சிறப்பு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. 100 மீட்டர் வரை மோட்டார் சைக்கிளில் செல்லக் கூடியவர்கள் சாலை விதிகளை மீறி சென்றாலோ ஹெல்மெட் அணியாமல் சென்றால் முக கவசம் அணியாமல் சென்றால் உடனடியாக படமெடுத்து வாகன எண்ணின் முகவரிக்கு எஃப் ஐ ஆர் மற்றும் அதற்கான அபராத தொகையுடன் கூடிய ரசீது அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று சாலையில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு சாலை விதிமீறல் மற்றும் ஹெல்மெட் அணியாததற்காக நவீன தொழில்நுட்ப கேமரா பதிவு செய்த அறிக்கை மூலமாக அவருக்கு அபராதம் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், தொடர்ந்து கேமரா கோவையில் உள்ள அனைத்து சாலைகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இவை அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை உடனடியாக வாகனத்தை புகைப்படமெடுத்து போலீசார் கண்ட்ரோல் ரூம்க்கு அது அனுப்பிவிடும்.
பின்னர், உடனடியாக அங்கிருந்து அவருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக வாகன சட்டத்தின்படி அவர்களுக்கான அரசு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை பதிவு செய்து நேரடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டு அவரிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்படும்.
ஆகவே, மக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து முகக் கவசம், ஹெல்மெட், கையுறை போன்றவை அணிந்து செல்ல வேண்டும். இதன் மூலமாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த தொழில்நுட்ப கேமரா செயல்பாடுகள் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.