கோவை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் - தண்டர்போல்ட் போலீசார் இடையேயான கடும் மோதலில் ஒரு மாவோயிஸ்ட் பலியான நிலையில், 2 பேர் காயத்துடன் பிடிபட்டுள்ளனர்.

கோவை கேரள எல்லைப்பகுதியான வயநாடு பகுதியில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து கேரளா சிறப்பு அதிரடிப்படையான தண்டர்போல்ட் போலீசார் அடிக்கடி காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேருக்கு நேரான மோதலில் 7க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவர்கள் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்டுகளுக்கும் தண்டர்போல்ட் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயத்துடன் பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்த இடத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டது.