பந்தலூர் தாலுக்கா பிதிர்காட்டில் மின்சாரம் தாக்கி காட்டுயானை இறப்பு

நீலகிரி: பந்தலூர் தாலுக்கா, பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலை பகுதியில், தனியார் தோட்ட மேலாளர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி கருகி இறந்து கிடந்துள்ளது.



நீலகிரி: பந்தலூர் தாலுக்கா, பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலை பகுதியில், தனியார் தோட்ட மேலாளர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி கருகி இறந்து கிடந்துள்ளது.

இது குறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கூடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஸ் சோமன், உதவி வன பாதுகாவலர், விஜயன் வனச்சரகர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும், முதுமலை கால் நடை மருத்துவர் ராஜேஸ் குமார், பிரேத பரிசோதனையை நடத்தினார். அப்போது, யானை இறந்து கிடந்த இடத்தில் மின் கம்பி இன்று அறுந்து கிடந்தது தெரியவந்தது. அங்கு இருந்த பாக்கு மர மட்டைகளை யானை உண்ண இழுத்த போது, கம்பி அறுந்து யானையை மின்சாரம் தாக்கி இருக்கலாம் இன்று கூறப்படுகிறது.

இறந்த யானை 15 வயதுடைய ஆண் யானை என்றும் மின்சாரம் தாக்கி தீயில் கருகி இறந்தது தெரிய வந்ததுள்ளது. பிரேத பரிசோதனைக்குப், பிறகு அதேப் பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...