கோவை வாலாங்குளம்‌ ஏரி மேம்பாட்டுத்திட்டம்: பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க கைப்பிடி சுவருக்கு பதிலாக கம்பிகள்‌ அமைப்பு - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை: கோவை மாநகராட்சி வாலாங்குளம்‌ ஏரி மேம்பாட்டுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க கைப்பிடிச் சுவருக்கு பதிலாக கம்பிகள்‌ அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வாலாங்குளம்‌ ஏரி மேம்பாட்டுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க கைப்பிடிச் சுவருக்கு பதிலாக கம்பிகள்‌ அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வாலாங்குளத்தின்‌ வடபகுதியில்‌ உள்ள சுவர்‌ பாழாகுது பயனுள்ள கட்டமைப்பு என்று தினமலர்‌ நாளிதழில்‌ கடந்த 31.10.2020அன்று செய்தி வெளியானது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

வாலாங்குளம்‌ ஏரியின்‌ வடபகுதியில்‌ சுங்கம்‌ சந்திப்பு அருகில்‌ கடந்த 2016-ம்‌ ஆண்டில்‌ கேபியான்‌ தொழில்நுட்பத்தில்‌ ஒரு சுவர்‌ எழுப்பப்பட்டது. அந்த சுவர்‌ எழுப்பப்பட்ட போது, அதன்‌ பின்னால்‌ மேம்பாட்டுப்‌ பணிகளோ அல்லது பொதுமக்கள்‌ புழங்கும்‌ பகுதியோ எதுவும்‌ அமைந்திருக்கவில்லை.

தற்போதைய ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ கோவை மாநகராட்சியில்‌ இந்த பகுதி முழுவதையும்‌ மேம்படுத்தவும்‌, வாலாங்குளத்தின்‌ ஏரிப்‌ பகுதியின்‌ கரைகளை மேலும்‌ பாதுகாப்பு மிக்கதாக அமைத்திடவும்‌ திட்டங்கள்‌ தீட்டிச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, முன்பு கட்டப்பட்டு இருந்த சுவர்‌ ஏரிக்கரையை பார்வையிட முடியாதபடி தடுத்திருந்தது. தற்போதைய திட்டத்தின்‌ மூலம்‌ ஏரிக்கரைக்கு மக்கள்‌ எளிதில்‌ சென்றுவரும்‌ இடமாக மாற்றி அமைக்கப்பட இருக்கிறது.

மேலும்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ இந்த பகுதி “சுங்கம்‌ ஏரி தோட்டம்‌” அமையவிருக்கும்‌ வடபகுதியின்‌ நுழைவு வாயிலாகவும்‌ இருக்கும்‌. முன்பு அமைக்கப்பட்டிருந்த கைப்பிடிச்‌ சுவர்‌ 5 அடி உயரம்‌ கொண்டது. அது தற்போது அமைக்கப்பட்டிருக்கும்‌ People Promenade என்னும்‌ மக்கள்‌ உலாவும்‌ இடத்தை பார்க்க முடியாத படியாகவும்‌ ஒளிபுகா இடமாகவும்‌ இருந்தது.

இந்த சூழ்நிலையில்‌ மேற்கண்ட பணியை மாற்றியமைக்கும்‌ பொருட்டும்‌ மேலும்‌ பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க இந்த கைப்பிடிச் சுவருக்கு பதிலாக கம்பிகள்‌ அமைக்கப்பட இருக்கிறது.

மேலும்‌, இந்த சுங்கம்‌ ஏரி கரைப்பகுதி ஏரி நுழைவு வாயிலாகவும்‌ அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...