கோவை மாநகராட்சி வளாகத்தில்‌ விஜிலென்ஸ்‌ விழிப்புணர்வு வாரவிழா பேரணி; மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில்‌ விஜிலென்ஸ்‌ விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில்‌ விஜிலென்ஸ்‌ விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும்‌ அக்டோபர்‌ 27 முதல்‌ நவம்பர்‌ 2ம்‌ தேதி வரை ஊழல் தடுப்பு மற்றும்‌ கண்காணிப்புத்துறை மூலம்‌ விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய்‌ படேல்‌ அவர்களின்‌ வழிமுறைகளை கடைபிடித்து விஜிலென்ஸ்‌ விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.



அதனைத்‌ தொடர்ந்து, இன்று மாநகராட்சி வளாகத்தில்‌ விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில்‌ லஞ்சம்‌ வாங்காதே, வசதிக்கேற்ப வாழப் பழகிக்கொள்‌, நேர்மையை கடைபிடித்து பொதுமக்களின்‌ செல்வாக்கை இழந்தவர்களை, லஞ்சத்தை அறவே ஒழிக்க ஒன்றுபட்டு சபதம்‌ ஏற்போம்‌, நேர்மை நமது வாழ்வின்‌ வழிமுறை என பல்வேறு வாசகங்கள்‌ அடங்கிய பதாகைகளை கையில்‌ ஏந்தியபடி மாநகராட்சி அலுவலர்கள்‌ நடந்து சென்றனர்‌.



இப்பேரணியானது, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்‌ வரை சென்றடைகிறது.



200க்கும்‌ மேற்பட்ட மாநகராட்சி அலுவலா்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இந்த பேரணியை துவக்கி வைக்கும்பொழுது மாநகராட்சி துணை ஆணையர் எஸ்‌.மதுராந்தகி, விஜிலென்ஸ்‌ ஆய்வாளர்கள்‌ பரிமளாதேவி, எழிலரசி, சசிலேகா ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...