கோவையில் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் நேற்று அனுசரிப்பு!

கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கல்லறை திருநாள் வருடந்தோறும் நவம்பர் 2ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மரணமடைந்த ஆன்மாக்களுக்கு சகல ஆத்மாக்களின் திருநாள் என ஒவ்வொரு ஆண்டும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாளை பெரும்பாலானோர் நேற்று அனுசரித்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வரும் நாட்களில் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு திருச்சபையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கல்லறை திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை செய்ய வந்தவர்களை நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கல்லறை திருநாளையொட்டி கல்லறைகளை கழுவி பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபங்கள் செய்து கிறிஸ்தவ பாடல்களைப் பாடி அமைதியாக பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...