திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தை எக்காரணத்தைக் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டோம், கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம் என கூறி 5 கிராமங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது.
வருடந்தோறும் இந்த கோவிலில் சித்திரை மாத திருவிழா 2 வாரம் நடைபெறும். பிரம்மாண்ட திருவிழாவில், ஆண்டிபாளையம் சின்னண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 10,000 - மேற்பட்ட மக்கள் கொண்டாடும் விழா பெரும் விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் 11.60 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் காக்க 2013 முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், கோவில் பயன்பாட்டுக்கு நிலம் வேண்டும், கோவில் நிலத்தை போலீசாருக்கு வழங்கக்கூடாது என 5 ஊர் பொது மக்கள் 2500க்கும் மேற்பட்டோர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பிரிவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம், எக்காரணத்தைக் கொண்டும் கோவில் நிலத்தை விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.