கோவை: கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதி, காந்திபுரம் பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவை மாநகராட்சி சார்பில் எமதர்ம ராஜா வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுப்பதால், மக்களுக்கு
கொரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் எமதர்ம ராஜா வேடமணிந்து வீதிகளில் உள்ள வந்தனர்.
இந்த விழிப்புணர்வு குறித்த துவக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், கலந்துகொண்ட கோவை மாநகராட்சி ஆணையர், குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆனையர், தமிழக அரசு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி சார்பில் எடுக்கபட்ட தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது நோய் தொற்று கோவை மாவட்டத்தில் குறைந்து உள்ளது என்றார்.

இந்த நிலையில், தற்போது பண்டிகை காலம் காரணமாக அதிகமாக மக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நிலையில், அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் எம்தர்ம ராஜா வேடமணிந்த நபர்களை கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து வணிகர்களையும் அழைத்து பேசி பண்டிகை காலத்தில் பின்பற்ற வேண்டிய நோய் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதிக நெரிசல் உள்ள கடைகளை கண்காணிக்க, நான்கு மண்டலத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கபட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
மேலும், நோய் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து பின்பற்றாத நிறுவனங்களை தற்காலிகமாக மூடும் நடவடிக்கையும் எடுக்கப்படுமென, எச்சரித்தார்.
இதனையடுத்து, விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட ஆணையர், கூட்டம் அதிகமுள்ள கடைகளில் உள்ள வாடிக்கையாளர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். இதனையடுத்து, திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், கணபதி சில்கஸ் நிறுவனத்தற்கு ரூ.2 லட்சமும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.