கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மத்தியில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புலி ஒன்று, வளர்ப்பு நாயை தூக்கி சென்றதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

வால்பாறை மத்தியில் உள்ள வாழைத் தோட்டம் பகுதியில், ஆயிரக்கணக்கான குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் நடராஜன் என்பவர் வீட்டின் வாசலில் ரத்தக்கரை இருந்துள்ளது.

இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் அங்குள்ள பல கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, நடராஜன் வீட்டின் எதிர் வீட்டில் வாசலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், இன்று காலை 4 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று நடராஜன் பக்கத்துவீட்டு வளர்ப்பு நாயை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு வருகின்றனர்.
சிறுத்தை புலியின் நடமாட்டம் மக்களிடையே, பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.