திருநீறு பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - கோவையில் கருணாஸ் பேட்டி

கோவை: தேவர் ஜெயந்தி விழாவின் போது, திருநீறு பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய, திமுக தலைவர் ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும், என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.



கோவை: தேவர் ஜெயந்தி விழாவின் போது, திருநீறு பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய, திமுக தலைவர் ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும், என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில், திருநீறு பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதற்காக, ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம், என்று அவர் கூறினார்.

மேலும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் எனவும் இந்த தேர்தலில் கூடுதல் சீட் கேட்பேன் என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை எனில் அதிமுகவை ஆதரிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.

சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன் எனவும் இன்னும் நூறு பாஜக வந்தாலும் தமிழ் மண்ணில் சமூக நீதி காக்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...