கொரோனா பாதித்த குழந்தைகளை தாக்கும் மிஸ்சி (MIS-C) நோய் தொற்று..! அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் : மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிஸ்சி நோய்த் தொற்றுக்கு (Multi-System Inflammatory Syndrome in Children) இதுவரை திருப்பூரை சேர்ந்த 3 குழந்தைகள், கோவையை சேர்ந்த 4 குழந்தைகள், மொத்தம் 7 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிஸ்சி நோய்த் தொற்றுக்கு (Multi-System Inflammatory Syndrome in Children) இதுவரை திருப்பூரை சேர்ந்த 3 குழந்தைகள், கோவையை சேர்ந்த 4 குழந்தைகள், மொத்தம் 7 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், மிஸ்சி நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளில், ஒரு குழந்தை தவிர, மற்ற குழந்தைகள் அனைவரும் குணமடைந்து

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

13 வயதுக்குள் உள்ள குழந்தைகளை, இந்நோய் தொற்று தாக்குகிறது, என்று எச்சரித்த கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு துறை, தலைவர் பூமா, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்புடைய குழந்தைகள் ஆகியோரை இந்நோய்த் தொற்று தாக்க வாய்ப்புள்ளது, என்றார்.

மேலும், அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் இதுவரை 7 குழந்தைகள் மிஸ்சி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இம்யூனோ குளோபலின் என்ற மருந்து, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்ப, இந்த ஊசி 10 முறை செலுத்தப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கபட்ட, திருப்பூரை சேர்ந்த 1 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்காமல் தாமதமாக அனுமதித்ததே, குழந்தை உயிரிழப்புக்கு காரணம், என்றார்.

மேலும், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, கண் சிவந்து காணப்படுதல், திடீர் மயக்கம் போன்றவை, இதன் அறிகுறிகளாகும். இது போன்ற, அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் அலட்சியம் காட்டாமல், உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். தாமதம் செய்தால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும், என்று மருத்துவர் பூமா எச்சரித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...