கோவை: கிடுகிடுவென உயர்ந்து வரும் வெங்காய விலையால், மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளகி வரும் நிலையில், கோவையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

மழை காரணமாக, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால்,
வெங்காயத்தின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், கிலோ ரூ.65 முதல் ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.100க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்திருந்தார். அதன்படி கடந்த அக்டோபர் 22ம் தேதியில் இருந்து தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வரத்து இல்லாததால், கோவையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட், உக்கடம், சிந்தாமணி, உப்பிலிப்பாளையம், ஒண்டிப்புதூர், பெ.நா.பாளையம், தெலுங்குப்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், சாய்பாபா காலனி ஆகிய 10 இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.