கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 251 பேருக்கு தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 42,776 ஆக உயர்வு!

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,776 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 553 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 633 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,484 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2,739 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...